ஈரான்-அமெரிக்கா இடையே ஏற்படுத்தப்பட்ட இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறி விட்டதாக கூறி, அந்த நாடு மீது அமெரிக்க தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.இதனால் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இரு தரப்புக்கும் இடையே தாக்குதல் நடக்கிறது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து செங்கடல் வழியாக உள்ள பாப் அல்-மண்டேப் ஜலசந்தி மூலம் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், அந்தப் பகுதியில் உள்ள ஏமனின் பெரும்பகுதி ஹவுத்தி கிளர்ச்சிப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி படையினர், பாப் அல்-மண்டேப் ஜலசந்தியையும் முழுமையாக மூடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நடந்தால், உலகளவில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் உரங்கள் விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு, சர்வதேச பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் ன்று கூறப்படுகிறது. ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயரத்தொடங்கியுள்ளது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/us-iran-conflict-intensifies-again-risk-of-crude-oil-shortage




