நல்ல காரியங்கள் புதிய முயற்சிகளை நல்ல நாள் மற்றும் கோள் பார்த்து செய்யவேண்டுமாம். கிரக சஞ்சாரங்களைக் கணித்து, அவை நல்ல சாரங்களில் நிற்கும்போது செய்யப்படும் காரியங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்கின்றன ஜோதிடநூல்கள். அதேபோல் தினமும் பஞ்சாங்கம் பார்ப்பது விசேஷம் என்கின்றன ஞானநூல்கள். தர்மசாஸ்திரப்படி தினந்தோறும் காலையில் பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்து, அன்றைய திதியைச் சொல்வதால் செல்வம் கிடைக்கும். வாரத்தை (கிழமை) சொல்வதால் ஆயுள் விருத்தியாகும். நட்சத்திரத்தைச் சொல்வதால் பாபம் விலகும். யோகத்தைச் சொல்வதால் நோய் நீங்கும். கரணத்தைச் சொல்வதால் காரியம் நிறைவேறும். பஞ்ச அங்கங்களில் திதிக்கு முக்கியத்துவம் உண்டு. தேய்பிறை திதிகளில் நல்ல காரியங்களைச் செய்யலாமா? திதிகளில் சுபகாரியங்களுக்கு உகந்தவை எவை என்பது குறித்த விளக்கங்கள் உண்டு. பொதுவாக, அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திதிகளில் சில திருமணம், கிரஹப்பிரவேசம், சீமந்தம், புதுத்தொழில் ஆரம்பம் ஆகியவற்றுக்கு மிகவும் உகந்தது என்பது சாஸ்திரக் கோட்பாடு. ஆனால், அமாவாசைக்குப் பிறகு வரும் திதிகளில் பஞ்சமி அல்லது சஷ்டிக்கு பிறகே வளர்பிறையின் பலன் வரும் என்பது ஜோதிட சாஸ்திர நடைமுறை விதி. அதாவது, அமாவாசை கழித்து வானில் சந்திரன் நன்றாகத் தெரியும் நாளான பஞ்சமி முதலே வளர்பிறையின் அனுகூலங்கள் உண்டாகும் என்பது தத்துவம். அதுபோலவே, தேய்பிறையில் பௌர்ணமியில் இருந்து பஞ்சமி வரை வளர்பிறையாகவே எடுத்துக்கொள்வது ஜோதிட விதி. வானில் சந்திரனின் பிம்பம் நன்கு தெரிவதால் இந்தப் பலன் சொல்லப்படுகிறது. வளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கி விட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷம். தேய் பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்யும் அவசியம் ஏற்பட்டால், பஞ்சமிக்குள் செய்வது உத்தமமாகும். தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறை காலம் போல் பலன் உண்டு என்று பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். இனி, ஒவ்வொரு திதி நாளின் முக்கியத்துவத்தைப்பற்றி அறிந்துகொள்வோம். திதிகள் எந்தெந்த திதிகளில் என்னென்ன செய்யலாம்? பிரதமை: இந்த திதிக்கு அதிதேவதை அக்னி. வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கு உகந்ததாகும். அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம். துவிதியை: இந்த திதிக்கு அதிதேவதை பிரம்மன். அரசுக் காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை, அணிமணிகள் அணியலாம். விரதம் இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம். திருதியை: இதன் அதிதேவதை கௌரி (பராசக்தி). குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்பக் காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது. அழகுக் கலையில் ஈடுபடலாம். சதுர்த்தி: எமதருமனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள். முற்கால மன்னர்கள் படையெடுப் புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆக, போட்டிகளில் வெற்றிபெற இந்த திதி நாளை தேர்வு செய்யலாம். நெருப்பு சம்பந்தமான காரியங்களைச் செய்ய உகந்த திதி இது. ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும். பஞ்சமி: இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள். எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட, நாக தோஷம் விலகும். நாக பஞ்சமி விசேஷமானது. மேலும், எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப் பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம். விஷ பயம் நீங்கும். சஷ்டி: இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் ஆவார். சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம் ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம். முருகனை வழிபட உகந்த நாள். சப்தமி: இதன் அதிதேவதை சூரியன். பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளலாம். சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம். அஷ்டமி: இதற்கு அதிதேவதை ஆவார். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம். ஐந்து முகம் கொண்ட சிவன் (ருத்ரன்) நவமி: இந்த திதிக்கு அம்பிகையே அதிதேவதை ஆவாள். சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் தொடங்கலாம். தீயபழக்கங்களுக்கு ஆட்பட்டவர்கள், அவற்றில் இருந்து மீள்வதற்கான மருத்துவ முயற்சிகளை இந்நாளில் தொடங்கலாம். தசமி: இந்தத் திதிக்கு எமதருமனே அதி தேவதை. எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். ஆன்மிகப் பணிகளுக்கு உகந்த நாள் இது. பயணம் மேற்கொள்ளலாம். அரசுக் காரியங்களில் ஈடுபடலாம். ஏகாதசி: இதற்கு, ருத்ரன் அதிதேவதை ஆவார். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். துவாதசி: அதிதேவதை விஷ்ணு ஆவார். மதச்சடங்குகளில் ஈடுபடலாம். திரயோதசி: சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணிய லாம். எதிர்ப்புகள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். சதுர்த்தசி: காளி இந்த திதிக்கு அதிதேவதை ஆவாள். ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. இந்த நாளில் வழக்கு, புதிய பங்குதாரர்களை இணைத்தல், புதிய வேலைக்கான முயற்சிகளில் இறங்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். பௌர்ணமி: இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள். ஹோம, சிற்ப, மங்கல காரியங் களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம். சகல ராசிக்காரர்களும் இந்த நாளில் அம்பாளை வழிபட்டு நன்மை அடையலாம். அமாவாசை: பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுக ளைச் செய்யலாம். தான- தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். ஈடுபடலாம். இயந்திரப்பணிகள் மேற்கொள்ள லாம். சிவன், சக்தி அதிதேவதை ஆவார்கள். இனி, உங்கள் ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட திதிகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்வோம். திதிநாள்கள் உங்கள் ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட திதிகள்! மேஷம்: இவர்களுக்கு சஷ்டி திதி அனுகூலம் தரும். இவர்கள், அமாவாசை மற்றும் பிரதமை திதிகளைத் தவிர்க்கவேண்டும். பொதுவாகவே இந்த இரண்டு திதிகளையும் எவரும் சுபகாரியங் களுக்குப் பயன்படுத்துவது இல்லை. ரிஷபம்: சுக்ல பட்ச சதுர்த்தசி அதிர்ஷ்டம் தரும். இந்தத் திதியில் இவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தசமி திதியைத் தவிர்க்கலாம். மிதுனம்: பஞ்சமியும் சப்தமியும் அனுகூலம் செய்யும். தொழில் தொடங் குவது, புதுச் சொத்து கள் வாங்குவது, சுப காரியங்களுக்கு ஆரம்பப் பணிகளைச் செய்வது என இந்த நாளில் செயல் பட்டால், நற்பலன்கள் கிடைக்கும். அஷ்டமி, நவமியைத் தவிர்க்கலாம். கடகம்: முன்னேற்றத்துக்கு அச்சாரமான முயற்சிகளை கடக ராசியினர் சதுர்த்தி திதிநாளில் தொடங்கினால் வெற்றி நிச்சயம். இவர்கள், துவாதசி திதியைத் தவிர்க்கலாம். சிம்மம்: ராஜ ஆளுமை மிக்க இந்த ராசியினர், குடும்பம், தொழில், உத்தியோகம் சார்ந்து எவ்வித புதிய முயற்சிகளாக இருந்தாலும், சப்தமி திதிநாளில் தொடங்கினால், பன்மடங்காக பலன் கிடைக்கும். இவர்கள் திரயோதசி, சதுர்த்தசி திதி நாள்களைத் தவிர்க்கலாம். கன்னி: இவர்களுக்கு திருதியை அனுகூல பலன்களையும் அதிர்ஷ்ட யோகங்களையும் தரும். சஷ்டி மற்றும் சதுர்த்தசி திதிநாள்களில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவேண்டும். துலாம்: பயணம் முதல் பிசினஸ் வரையிலும் இவர்கள் பஞ்சமியைத் தேர்ந்தெடுத்து காரியம் ஆற்றினால், நன்மைகள் வந்து சேரும். அஷ்டமி, நவமியைத் தவிர்க்க வேண்டும். விருச்சிகம்: தசமியும் ஏகாதசியும் அதிர்ஷ்டம் தரும். செய்தொழிலில் புதிய நடவடிக்கைகள், குடும்ப காரியங்கள் முதலானவற்றுக்கு இந்த இரண்டு திதிகளும் சிறப்பு சேர்க்கும். சதுர்த்தி, சஷ்டியை இவர்கள் தவிர்ப்பது நலம். தனுசு: இவர்களுக்கு அனுகூலமான திதிகள் திருதியை மற்றும் சதுர்த்தி. துவாதசி மற்றும் திரயோதசி திதிநாள்களை தவிர்க்கவும். மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு சப்தமியும் பஞ்சமியும் நன்மை அளிக்கும். இந்த நாள்களில் சுபகாரியங்களுக்கு அச்சாரம் இடலாம். நவமி மற்றும் தசமியைத் தவிர்க்கலாம். கும்பம்: திருதியையும் சதுர்த்தியும் சிறப்பான பலன்களைத் தரும். அஷ்டமி, நவமியை வழக்கம்போன்று தவிர்த்து விடலாம். மீனம்: இந்த ராசி அன்பர்கள் பஞ்சமி மற்றும் சஷ்டி திதி நாள்களில் தொடங்கும் காரியங்கள் அனுகூல பலன்களை அள்ளி வழங்கும். பிரதமை மற்றும் ஏகாதசி திதிநாள்களை இவர்கள் தவிர்த்துவிடலாம். இவை, ராசி அடிப்படையிலான பொதுவான விளக்கங்கள். ஜாதகப்படி உரிய கிரக நிலைகளை ஆராய்ந்து ஜோதிடரின் வழிகாட்டலுடன், மேற்காணும் விவரப்படி உங்களுக்கான திதிநாள்களைத் தேர்வு செய்து செயல்பட்டால், அதில் பூரணமான வெற்றியைப் பெறலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/spiritual/astrology/do-you-know-which-lucky-tithi-day-brings-success-to-your-zodiac-sign




