சென்னை, சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்றில் 4 ஆட்டங்களும் டிராவாகின. 4 ஆட்டங்களும் டிரா சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. 8 வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த போட்டி 7 சுற்றுகளை கொண்டது. இதில் நேற்று நடந்த 4-வது சுற்றில் 4 ஆட்டங்களும் டிராவில் முடிந்தது. உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், 41-வது காய் நகர்த்தலில் நோடிர்பெக் அப்துசத்தோரோவுடன் (உஸ்பெகிஸ்தான்) டிரா செய்ததும் அடங்கும். 5-வது சுற்று 4-வது சுற்று முடிவில் பிரான்சின் அலிரெஜா 3 புள்ளியுடன் முதலிடத்திலும், இந்தியாவின் அர் ஜூன் எரிகைசி 2½ புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். இன்று 5-வது சுற்று நடக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/othersports/chennai-grandmasters-all-4-games-drawn-in-4th-round




