மும்பை, ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் மேம்பாட்டு திட்டப்ப ணிகள் நடந்து வருகிறது. மேம்பாட்டு திட்டத்துக்காக வீடுகளை காலி செய்யும் மக்களுக்கு 12 மாத வாடகை முன் பணமாகவும், ஒரு மாத வாடகை தரகு தொகை, இடமாற்ற செலவு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் ஆண்டு தோறும் வாடகை தொகை 5 சதவீதம் உயர்த்தப்படும். இந்தநிலையில் மக்கள் பலரும் வாடகை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, தங்களின் வீடுகளை தாமாக முன்வந்து காலி செய்து வருவதாக அதானி நிறுவனம் கூறியுள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 250-க்கும் மேற்பட்ட வாடகை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும், 1,023 குடும்பங்கள் தங்கள் வீடுகளை காலி செய்துள்ளதாக “அதானி நவபாரத் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்' அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "பொதுமக்களின் ஒத்துழைப்பால் இந்தத் திட்டம் திட்டமிட்டபடி சீராக நடந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியுள் ளது. உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக இதுவரை 570 வீடுகள் அகற்றப்பட்டுள்ளன” என அதிகாரி ஒருவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/1023-families-vacated-their-homes-for-the-dharavi-redevelopment-project-in-maharashtra




