சென்னை, முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூர் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, பெரம்பூர் தொகுதி அலுவலகம் சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 1-வது தெருவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த அலுவலகத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று மாலை திறந்து வைத்தார். தொடர்ந்து எம்.எல்.ஏ அலுவலக வளாகத்தில் இ -சேவை மையத்தை திறந்து வைத்தார். இந்தநிலையில், எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்போன் செயலியான அதில், பொதுமக்கள் தங்களது குறைகளை எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களது குறைகளையும் புகார்களையும் தொகுதி எம்.எல்.ஏ.வான முதல்-அமைச்சரிடம் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட உள்ள இந்த செயலிக்கு ‘மக்கள் சேவை தளம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், பெரம்பூர் மக்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்த பிரத்யேக செயலி பயன்பாட்டிற்கு வந்தது. மூலம் சேவை தளத்தை மக்கள் தொடர்பு கொள்ளலாம். 9498500444 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலம் பெரம்பூர் மக்கள் புகார் தெரிவிக்கலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-special-app-launched-by-chief-minister-vijay-for-the-people-of-perambur-has-been-launched




