லண்டன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்து பேட்டிங் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. காக்ஸ் (55) மற்றும் விக்கெட் கீப்பர் ஜேமீ ஸ்மித் (61) அரை சதம் விளாசினர். பென் டக்கெட் (17), எமிலியோ (8), கேப்டன் ரூட் (4), ஹாரி புரூக் (15), லாரன்ஸ் (17) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 248 ரன்கள் ஒல்லி ராபின்சன் டக்-அவுட் ஆனார். ஆர்ச்சர் (14) ரன்களிலும் வெளியேறினர். ஜோஷ் டங் (1), அட்கின்சன் (34) ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் நாள் போட்டியில் 50 நிமிடங்கள் மீதம் இருந்த நிலையில், லைட் (ஒளி) வெளிச்சம் சரிவர தெரியாத நிலையில், ஆட்டம் தடைபட்டது. இதனை தொடர்ந்து ஆட்டம் முடித்து கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. அப்போது 56 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ரன்களை இங்கிலாந்து எடுத்திருந்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 4 விக்கெட்டுகள், முகமது அலி 3 விக்கெட்டுகள் எடுத்தனர். 2-வது நாள் தொடர்ந்து 2-வது நாளான இன்று அட்கின்சன் (45) ஆட்டமிழந்ததும் போட்டி முடிவுக்கு வந்தது. ஜோஷ் டங் (30) ஆட்டமிழக்காமல் உள்ளார். 66.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து 290 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணியில் அஜன் அவைஸ் (46), ஷகீல் (16) தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் மளமளவென ஆட்டமிழந்தனர். இதனால், 37.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி 110 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/test-against-england-pakistan-all-out-for-110




