டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஊடகங்களிடம் போராட்டத்தில் கலந்துகொண்ட பலரும் உரையாற்றினர். அதில் ஒருவர்தான் இர்பான். பள்ளி சென்று கல்வியறிவை பெறாத இவர், தன் அனுபவம், ஆர்வம் மூலம் ஆழமான அரசியல் அறிவைப் பெற்றிருக்கிறார். அந்தப் பேட்டியில், நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும், குறிப்பாக உழைக்கும் வர்கத்தினர் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றியும் வெளிப்படையாகப் பேசியிருந்தார். அவர் பேச்சு சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளானது. அவர் குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் தேடப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் பெயர் இர்பான் என்றும், சாலையில் ஐஸ் விற்கும் தொழில் செய்பவர் என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இர்பானை அவரின் இல்லத்துக்குச் சென்று சந்தித்தார். ராகுல் காந்தி - இர்பான் ராகுல் காந்தியுடனான உரையாடலின்போது, ``எனக்கு எந்தத் தனிப்பட்ட கோரிக்கைகளும் இல்லை. தொழிலாளர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி தீர்வை நோக்கி நகர வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். ராகுல் காந்தியை சந்தித்ததற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இர்பான், ``ராகுல் காந்தி சார் வருவதற்கு முன்பு பிரியாங்கா காந்தி என்னிடம் போனில் பேசினார். அப்போது `ராகுல் காந்தியைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லுங்க இர்பான். என் பேச்சைக் கேட்பதில்லை. அவரை எப்படியாவது சம்மதிக்க வையுங்கள்' என என்னிடம் வேடிக்கையாகக் கேட்டார். ராகுல் காந்தி திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புவதாக அவரிடம் கூறினேன்." என நகைச்சுவையாகக் கூறினார். 'ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி!' - முதல்வர் விஜய்யை சந்திக்கிறாரா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/trending/viral/rahul-gandhi-met-irfan-who-went-viral-for-his-profound-views-at-jantar-mantar



