தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நிர்வாக காரணங்களுக்காகவும், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் சொந்த விருப்பத்தின் பேரிலும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் நிர்வாக காரணங்களுக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து திருநெல்வேலி சரக காவல் துறை துணை தலைவர் (டி.ஐ.ஜி.) திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார். அன்படி தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கும், சேக்அப்துல்காதர் தென்பாகம் குற்றப்பிரிவிலிருந்து சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்கும், முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் தென்பாகம் குற்றப்பிரிவுக்கும், புளியம்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், அருள்ஜார்ஜ் சகாயசாந்தி சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 5 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் இதேபோன்று, சொந்த விருப்பத்தின் பேரில் விண்ணப்பித்த 5 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை மண்டலம் விட்டு மண்டலம் பணியிட மாற்றம் செய்து சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குநர் (ஏ.டி.ஜி.பி.) மகேஷ்வர்தயாள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முறையே ஸ்ரீவைகுண்டம் செந்தில்குமார், குரும்பூர் சண்முகராஜ், நாசரேத் முரளி ஆகியோர் சென்னைக்கும், தூத்துக்குடி வடபாகம் நிவேதா, தென்பாகம் சுப்புராஜ் ஆகியோர் கோவைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்ற உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/10-police-officers-transferred-in-thoothukudi-district




