மடத்துக்குளம், திருப்பூர் மாவட்டம் மடத்துகுளத்தில் குண்டும், குழியுமாக மாறி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் மடத்துக்குளம் பேரூராட்சி சார்பில், புதிய சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து முடிந்தது. சாலை முழுவதும் சேதமடைந்தது திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ்வர்யா நகர் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைக்கப்பட்ட சாலை முழுவதும் சேதமடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. சாலை பணி எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் முதற்கட்டமாக ஜல்லிக் கற்கள் நிரப்பப்பட்டது. அதன்பின்னர், எந்த ஒரு பணியும் மேற்கொள்ளப்படவில்லை. சாலை பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. ‘தினத்தந்தி’யில் செய்தி இதனால் சாலை குண்டும், குழியுமாக மாறி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் அவதியடைந்து வந்தனர். மேலும், இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. மக்கள் மகிழ்ச்சி இதன் எதிரொலியாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் மடத்துக்குளம் பேரூராட்சி சார்பில், புதிய சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து முடிந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், செய்தி பிரசுரம் செய்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/new-road-brings-relief-to-madathukulam-residents




