தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் 418 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் காரில் கடத்தி வந்த வடமாநிலத்தவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் வாகன சோதனை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி உட்கோட்டம், கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈராச்சி-துறையூர் செல்லும் ரோடு பகுதியில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். 418 கிலோ புகையிலை பொருட்கள்; கார் பறிமுதல் அந்த சோதனையில் காரில் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. காரில் இருந்த 418 கிலோ 464 கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். வடமாநிலத்தவர்கள் உள்பட 3 பேர் கைது இந்த கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த செல்லக்கனி மகன் கண்ணன் (வயது 40), குஜராத் மாநிலம், பனாஸ்காந்தா மாவட்டம், தீசா தாலுகாவைச் சேர்ந்த நர்ஷிபாய் மகன் கமலேஷ்சவுத்ரி(25), ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தைச் சேர்ந்த பலவன்சிங் மகன் ரவீந்திரசிங்(20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-418-kg-of-tobacco-products-smuggled-in-a-car-3-people-including-those-from-the-northern-states-arrested




