சேலம், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதல்-அமைச்சர் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணை டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் போன்ற 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். உபரிநீர் திறப்பு ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனால் கடந்த 2 வாரங்களாக கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியதை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1 (இன்று) தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், தொடர்ந்து 45 நாட்கள் திறந்துவிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. முதல்-அமைச்சர் வருகை அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்று காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக முதல்-அமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை சேலம் வந்தடைந்தார். விமான நிலையத்திலிருந்து வேனில் சாலை மார்க்கமாக பூசாரிப்பட்டி பிரிவு, வள்ளையூர்கோட்டை, ஜோடுகுளி, தீவட்டிப்பட்டி, மேச்சேரி வழியாக அவர் மேட்டூர் வந்தார். ரோடு ஷோ முதல்-அமைச்சர் விஜய்யின் சேலம் வருகையையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவரை வரவேற்கும் விதமாக விமான நிலையத்தில் இருந்து மேட்டூர் வரை சாலையில் இருபுறமும் கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன. திறந்த வேனில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை நோக்கி கையசைத்தவாறு முதல்-அமைச்சர் விஜய் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபக்கங்களிலும் கூடியிருந்த ஏராளமான பொதுமக்களும், தவெக தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பாசனத்திற்காக நீர் திறப்பு இந்த நிலையில் மேட்டூர் அணை வந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் வலது கரையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை அவர் திறந்து வைத்தார். அணை திறக்கப்பட்டதும் வெளியேறிய காவிரி நீரில் மலர்கள் மற்றும் நெல்லை தூவி முதல்-அமைச்சர் விஜய் வரவேற்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-opens-water-from-mettur-dam-for-delta-irrigation




