ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதலை தொடர்ந்தன. அன்றைய தினமே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.இதை தொடர்ந்து கமெனியின் மகன் மொஜ்தபா கமெனி ஈரானின் புதிய உச்சதலைவராக பொறுப்பேற்றார். எனினும் அவர் பல வாரங்களாக பொதுவெளியில் தோன்றுவதை தவிர்த்து வந்தார். பொதுவெளியில் தோன்றாமல் டெலிகிராம் மற்றும் அரசு ஊடகங்களில் எழுத்து பூர்வமான அறிக்கைகள் வாயிலாக மட்டுமே தனது உத்தரவுகளை பிறப்பித்து இருந்தார். சமீபத்தில் நடந்த தந்தை கமெனி இறுதி சடங்கில் கூட மொஜ்தபா பங்கேற்கவில்லை. பாதுகாப்பு காரணங்களால் அவர் பங்கேற்கவில்லை என்று ஈரான் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் வருகிற 23-ம் தேதி மாலை 5 மணிக்கு தலைநகர் தெக்ரானில் கமெனி நினைவேந்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மொஜ்தபா கமெனி பங்கேற்பார் என்று ஈரான் அரசு அறிவித்து உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அவர் நேரில் பங்கேற்பாரா? அல்லது வீடியோ கான்பரன்சிங் முறையில் பங்கேற்பாரா? என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/fter-months-out-of-sight-iran-supreme-leader-mojtaba-khamenei-likely-to-make-first-public-appearance-next-week




