திருச்சி, திருச்சி விமான நிலையத்தில் மொத்தம் ரூ.94 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் மற்றும் கடத்தல் தங்கத்தை சுஙகத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த பயணிகளிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விமான பயணிகளிடம் சோதனை திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூர் வழியாக வியட்நாம் செல்ல வந்த 2 பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.13 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.94 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், தங்கம் பறிமுதல் இதேபோல கோலாலம்பூரில் இருந்து வந்த பயணியிடம் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 10 சவரன் தங்கம் சிக்கியது. கடந்த 5-ந்தேதி 2 பயணிகளிடம் ரூ.70 லட்சம் மதிப்பிலான டாலர், பவுண்ட், யூரோவும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் 5 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.94 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் மற்றும் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/foreign-currency-gold-worth-rs94-lakh-seized-at-trichy-airport




