சென்னை: தமிழ்நாட்டில் 15 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பணியிட மாற்றம் அதன்படி, தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளராக ஏ.நாயர், பட்டுக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளராக பி.அங்கிதா, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உதவி காவல் கண்காணிப்பாளராக எஸ்.அஸ்வினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளராக பிஸ்வாஜித் பண்டா, சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளராக டி.ஜே.சத்ரிய கவின், திருவெறும்பூர் உதவி காவல் கண்காணிப்பாளராக எஸ்.இன்பா நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் உதவி காவல் கண்காணிப்பாளராக பி.மஞ்சுமா, ராசிபுரம் உதவி காவல் கண்காணிப்பாளராக மண்ணம் சுஜித் சம்பத், கோவில்பட்டி உதவி காவல் கண்காணிப்பாளராக நீல் சர்மா, ராமநாதபுரம் உதவி காவல் கண்காணிப்பாளராக கே.நேகா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் உதவி காவல் கண்காணிப்பாளராக பிரியங்கா பார்கவ், திருவண்ணாமலை ஊரக உதவி காவல் கண்காணிப்பாளராக ராகுல் வி.கோபால், ராஜபாளையம் உதவி காவல் கண்காணிப்பாளராக சைந்தானே ஸ்வப்னிலா அனில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உதவி காவல் கண்காணிப்பாளராக தனூ சிங், மதுரை மாநகரம் அண்ணாநகர் சரக உதவி காவல் கண்காணிப்பாளராக ஆஷிஷ் புனியா நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/15-ips-officers-transferred-in-tamil-nadu-tamil-nadu-government-orders




