சென்னை, இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் இறுதியில் வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒத்திவைக்கப்பட்ட தொடர் இந்தியா கடந்த ஆண்டே வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு, ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் உறவில் பின்னடைவு ஏற்பட்டது. டி20 உலகக்கோப்பை சர்ச்சை இதன் விளைவாக டி20 உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே மாற்ற வேண்டும் என்று வங்காளதேச கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) வலியுறுத்தியது. எனினும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதன் காரணமாக வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது. தற்போது இரு வாரியங்களுக்கிடையே விரிசல் சீரடைந்து வரும்நிலையில், இந்திய அணி இந்த ஆண்டின் இறுதியில் வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆப்கானிஸ்தான் தொடருக்கு பாதிப்பா? இதற்கிடையில், செப்டம்பர் மாதத்தில் டெல்லியில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட ஆப்கானிஸ்தானும் திட்டமிட்டுள்ளது. இந்த தொடர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அதே நேரத்தில் இந்தியா வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால், ஆப்கானிஸ்தான் தொடரின் அட்டவணையில் மாற்றம் அல்லது ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது. இந்திய அணியின் அடுத்தடுத்த அட்டவணை இந்திய அணி ஆகஸ்ட் 15 முதல் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்பிறகு, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 அணி, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 3 வரை ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/india-may-postpone-afghanistan-series-for-bangladesh-tour-subject-to-govt-approval




