திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருவிழா காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் மற்றும் சுபமுகூர்த்த தினம் என்பதால் கோவிலில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் சன்முகவிலாச மண்டபம், கோவில் வளாகம் உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷே கமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-and-auspicious-day-surge-of-devotees-at-thiruchendur-temple




