லண்டன், இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 285 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. ஸ்மிர்தி மந்தனா (83 ரன்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (58 ரன்), தீப்தி ஷர்மா (57 ரன்) அரைசதம் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் டுக்கு 21 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய மாயா பூஷியர் 23 ரன்னிலும், ஹீதர் நைட் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி 59.1 ஓவர்களில் 170 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக அமி ஜோன்ஸ் 52 ரன்னும், கேப்டன் நாட் சிவெர் 44 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் நடையை கட்டினர். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கிரந்தி கவுட் 10 ஓவர்கள் வீசி 37 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சயாலி சத்கரே, சினே ராணா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து 115 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி2-வது நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மிர்தி மந்தனா 69 ரன்னுடனும், யாஸ்திகா பாட்டியா 39 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/lords-test-england-team-bowled-out-for-170-runs




