செங்குன்றம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரத்தின் 81 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாதவரம் மூலக்கடை அருகே ரத்ததான முகாம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டார். தமிழ்நாடு காங்கிரஸ் மருத்துவ அணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஷியாம் சாகர் மற்றும் வட சென்னை சவுந்தரராஜன் ஏற்பாட்டில், நடைபெற்ற இந்த நிகழ் வில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் பிரபு, திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காங்கை குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்த நிகழ்வில், ஆர்வத்துடன் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். ரத்த தானம் செய்த அனைவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சான்றிதழ் வழங் கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, இடைத் தேர்தலில் முதலமைச்சருக்கு நல்ல பெயர் உண்டு. அதிக ஆதரவு எதிர்பார்ப்பு உள்ளதாகவும் முதலமைச்சர் கூட்டணிக்கு ஆதரவு அதிகமாக இருக்கும். எனவும் தெரிவித் தார். இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/2nd-constituency-by-election-thaweka-has-good-support-karthi-chidambaram-interview




