தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "திருச்சி மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 590 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் மிகச் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், 63,157 பள்ளி மாணவர்கள் தினசரிப் பயன் பெற்று வருகின்றனர். ஏழை, எளிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அரசு இத்திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. திருவரங்கத்தில் நடைபெற்றுள்ள ரூ.50 கோடி மதிப்பிலான கோயில் நில அபகரிப்பு மோசடி வழக்கில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நில மோசடிப் பின்னணியில் ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசரோ அல்லது சார் பதிவாளரோ, யாராக இருந்தாலும் சரி, சட்டம் தன் கடமையைச் செய்யும். தவறு செய்தவர்கள் எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சமீபத்தில் நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவின் போது, லட்சக்கணக்கான பக்தர்கள் எந்தவிதப் பாகுபாடுமின்றி பொது வரிசையில் நின்று மிகவும் அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியைத் துறையின் அமைச்சர் என்ற முறையில் நானே முன்னின்று நடத்தினேன். அவ்வாறு இருக்கும்போது, நிர்வாகத்தை வழிநடத்தும் நாங்கள் எவ்வாறு பொது வழியில் சென்று தரிசிக்க முடியும்? இதனைச் சிலர் தேவையின்றி சர்ச்சையாக்க முயல்கின்றனர். அரசியலில் எதற்கெடுத்தாலும் குற்றம் சுமத்தும் தி.மு.க-வினருக்கு ஆப்பிளுக்கும், ஆரஞ்சுக்கும் உள்ள வித்தியாசம் கூடத் தெரிவதில்லை. ramesh மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதிக்கு எவ்வித நற்பணிகளையும் செய்யவில்லை. தொகுதி மக்களின் அதிருப்தி மற்றும் அருவருப்பான செயல்பாடுகளின் காரணமாகவே, கொளத்தூர் தொகுதி மக்களே கடந்த தேர்தலில் ஸ்டாலினைத் தோற்கடித்துள்ளனர். சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பாடும் பாட்டையே உதயநிதி ஸ்டாலினும் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கும் போது உதயநிதி ஸ்டாலின் ஒழுங்காகத் தனது இருக்கையில் அமர்ந்து கவனித்திருந்தால், யார் யார் எந்தெந்தத் துறைக்கு அமைச்சர்களாகப் பொறுப்பு வகிக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அவர் கிளாஸை கட் அடித்துவிட்டு சென்றுவிடுகிறார். அப்படி இருக்கும்போது, அவருக்கு எந்த அமைச்சர் எந்தத் துறை என்று எப்படித் தெரியவரும்?" என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/minister-ramesh-slams-dmk




