நெல்லை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”நெல்லை மாவட்டம் காரையாறு அணைப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி பாரம்பரிய முறைப்படி வனப்பகுதிக்குள் தங்கி வழிபடுவதற்கான அனுமதியை வழங்குமாறு அப்பகுதி பக்தர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருநாளன்று ஆண்டுதோறும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வனப்பகுதிக்குள் தற்காலிக குடிசைகள் அமைத்துத் தங்கி வழிபடுவது முன்னோர்கள் காலத்திலிருந்து தொடரும் ஆன்மீகப் பாரம்பரியமாகும். கொரோனோ பரவல் தொற்று காலத்தில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நடப்பாண்டில் தொடரும் நிலையில், அத்தகைய கட்டுப்பாடுகளை நீக்கி, வனவிலங்குகளுக்கும், இயற்கைக்கும் எந்தவித பாதிப்புமின்றி அப்பகுதி பக்தர்கள் தங்களின் பாரம்பரிய வழிபாட்டு முறையைத் தொடர அனுமதிக்குமாறு வனத்துறையிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். எனவே, தலைமுறை, தலைமுறைகளாகத் தொடரும் பக்தர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறையை நடப்பாண்டிலும் தொடரும் வகையில் அப்பகுதி பக்தர்கள் வனப்பகுதிக்குள் 10 நாட்கள் தங்கியிருந்து வழிபாடு நடத்துவதற்கான அனுமதியையும், காரையாறு மற்றும் சேர்வலாறு அணைப்பகுதிகளைப் பக்தர்கள் பார்வையிடுவதற்கான அனுமதியையும் வழங்கிடுமாறு வனத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-allow-devotees-to-stay-and-worship-at-sorimuthu-ayyanar-temple-ttv-dhinakaran-urges




