சென்னை, தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது விளையாட்டுக்கான முக்கிய அறிவிப்புகளையும் பல்வேறு முக்கிய கோரிக்கைகளையும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:- படகுப் போக்குவரத்து இராமேஸ்வரம் அக்னிதீர்த்தத்தில் இருந்து பாம்பன் கால்வாய் வழியாக மண்டபம் வரை உள்நாட்டு பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை தொடங்கப்படும். தடையற்ற போக்குவரத்து வடசென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தி தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்யும் வகையில், வியாசர்பாடி இரயில்வே மேம்பாலத்தின் மாதவரம் நோக்கிய கரம் நீட்டிக்கப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதே போல சென்னையில் வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை மற்றும் வடசென்னை பகுதிகளை நகரின் மத்தியப் பகுதிகளுடன் இணைக்கும் பேசின் பிரிட்ஜ் சந்திப்பில் அமைந்துள்ள குறுகலான பாலங்கள் அகலப்படுத்தப்படும். பொதுப்பணித்துறை திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரக் கட்டுப்பாட்டைப் பொதுமக்கள் நேரடியாகப் பார்வையிடும் வகையிலும், 100% வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும் புதிய "TN.PWD" செயலி உருவாக்கப்படும். பல்நோக்கு உள்விளையாட்டரங்கம் "இறகுப்பந்து, கூடைப்பந்து, வாள்வீச்சு, ஜூடோ, கையுந்துபந்து, கபாடி, மேசைப்பந்து உள்ளிட்ட பல்வேறு உள்விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் அனைத்துப் பருவ காலங்களிலும் தடையின்றிப் பயிற்சி பெறும் வகையில் கரூர், கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா ரூ.14 கோடியில் புதிய பல்நோக்கு உள்விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும். ஏஐ கட்டட மேலாண்மை அமைப்பு அரசு மருத்துவமனைகளின் பராமரிப்புப் பணிகளை நவீனப்படுத்தும் நோக்கில் IIT தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் முதற்கட்டமாகச் சென்னை இராசீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் AI தொழில்நுட்பம் சார்ந்த கட்டட மேலாண்மை அமைப்பு (BMS) அறிமுகப்படுத்தப்பட்டு, படிப்படியாகத் தமிழ்நாட்டின் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இந்த நவீன முறை விரிவுபடுத்தப்படும். ஊக்கத் தொகை உயர்வு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கான உயரிய ஊக்கத் தொகை உயர்வு அதிகரிக்கப்படும். அதன்படி, தங்கப் பதக்கம் வெல்வோருக்கான ஊக்கத்தொகை ரூ.3 கோடியிலிருந்து ரூ.5 கோடியாகவும், வெள்ளிப் பதக்கத்திற்கு ரூ.2 கோடியிலிருந்து ரூ.3 கோடியாகவும், வெண்கலப் பதக்கத்திற்கு ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடியாகவும் உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/boat-transport-minister-adhav-arjunas-announcement-in-the-legislative-assembly




