சபரிமலை, சபரிமலை அய்யப்பன் சன்னதியில் நடைபெறும் 'வெடி வழிபாடு' (சடங்குமுறை பட்டாசு காணிக்கை) முறையை தேவசம் போர்டு நிறுத்த உள்ளது. வனத்துறையின் ஆட்சேபனைகளை தொடர்ந்து, இந்த சேவைக்கான உரிமை ஏலத்திலிருந்து இது நீக்கப்பட்டுள்ளது. வனத்துறை கடும் எதிர்ப்பு சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ள பகுதி, பெரியார் புலிகள் காப்பகத்தின் கீழ் வரும் நிலையில், அதிகப்படியான வெடியோசையும், அதிர்வுகளும் விலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக வனத்துறை கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது. சபரிமலை சன்னிதானம், மாளிகாபுரத்தம்மன் கோயில் வளாகப் பகுதிகளில் அதிகளவில் வெடிமருந்துகளை சேமித்து வைப்பதிலும், அதை கையாளுவதிலும் மிகப்பெரிய விபத்து அபாயங்கள் உள்ளதாக காவல் துறை எச்சரித்து வந்தது. தேவசம் போர்டு இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான ஆன்மிக வழிபாட்டு ஏலப் பட்டியலில் இருந்து வெடிவழிபாட்டை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நீக்கியுள்ளது. வனவிலங்குகளின் நலன் மற்றும் சபரிமலைக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. நேர்த்திக்கடன் முன்னதாக சபரிமலை வரும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனாக வெடிவழிபாடு நடத்துவர். காலம் காலமாக அதிகமான பக்தர்கள் இந்த வழிபாட்டை நடத்தி வருகின்றனர். இதற்காக மாளிகைபுரம் கோவில் முன்புறத்திலும், சந்திராங்கதன் ரோட்டில் பெய்லி பாலம் துவங்கும் இடத்திலும், பெரிய நடைப்பந்தல் கீழ் பகுதியிலும், அதன் மேலே பிளை ஓவரிலும் இந்த கவுன்டர்கள் இருக்கும். வெடி வழிபாடு நடத்த கட்டணத்தை கவுன்டரில் செலுத்தினால் அங்கு இருக்கும் ஊழியர் பக்தர் பெயரை ஒலிபெருக்கியில் அறிவித்ததும் 600 மீட்டர் தூரத்தில் வெடி கொளுத்தப்பட்டு வெடிக்கும். வெடி வெடிக்கப்படுகிறதா என்பதை பக்தர் அந்த கவுன்டரில் இருந்தே பார்க்கும் வகையில் பெரிய டிவி வைக்கப்பட்டிருக்கும். முன்காலத்தில் கரிமலை, சரங்குத்தி போன்ற இடங்களிலும் வெடி வழிபாடு நடந்தது. இது காட்டு விலங்குகளுக்கு பிரச்னை ஏற்படுத்தும் என்பதால் வனத்துறை தலையிட்டு இதை தடை செய்திருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/forest-department-cites-disturbance-to-wildlife-vedi-vazhipadu-at-sabarimala-to-be-discontinued




