கோதை எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ்.சுவிஸ் பிலிம் பேக்டரி தயாரிக்க, பாலாஜி இயக்கத்தில் 'தி டார்க் ஹெவன்' என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. சின்னத்திரை பிரபலம் சித்து சித் கதாநாயகனாகவும், 'பிக்பாஸ்' தர்ஷிகா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ரித்விகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, சாப்ளின் பாலு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகிறது. சென்னையில் நடந்த பட விழாவில் கலந்து கொண்ட ரித்விகா பேசும்போது, 'இதுவரை வெளியான கிரைம்-திரில்லர் படங்களிலேயே வித்தியாசமாகவும், திருப்பங்கள் அதிகம் கொண்ட படமாகவும் இது இருக்கும். தற்போது சினிமாத்துறையில் இந்த வகை படங்கள் சினிமாவுக்கு, இந்த படங்கள் ஓ.டி.டி.க்கு என்று பிரித்து பார்க்கும் கலாசாரம் இருக்கிறது. ஆனால் எல்லா படத்தையும் தியேட்டர்களில் பார்த்தால்தான் அது சினிமாவுக்கு நல்லது. ஓ.டி.டி.க்கு வரும்போது அந்த படங்களை பார்த்துக்கொள்ளலாம். எனவே இந்த படத்துக்கு ரசிகர்கள் நம்பி வரலாம். இதுவரை நல்ல குடும்பப்பாங்கான பெண்ணாகத்தான் என்னை படங்களில் காட்டியிருக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தின் கதை எனக்கு பிடித்ததால், எதிர்மறை கதாபாத்திரமாக இருந்தாலும் விரும்பி நடித்தேன்', என்றார். சித்து கூறும்போது, "வெள்ளித்திரையில் இருந்தாலும் ஓரிரு படங்களிலும் தலைகாட்டியுள்ளேன். இன்று முதன்முறையாக கதாநாயகனாக களமிறங்கும் எனக்கு ரசிகர்கள் ஆதரவளித்து, உங்கள் இதயத்தில் ஒரு சிறிய இடத்தை கொடுங்கள்", என்று குறிப்பிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/cinimavil-puthu-kalasaram-nilavukirathu-nadigai-rithvika




