நீலகிரி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடி, தெப்பக்காடு பகுதி, அபாயகர சரிவுகள் மற்றும் 36 குறுகிய வளைவுகளை உடையது. இங்கு சுற்றுலா வாகனங்கள் சென்று வந்தன. இதனால், அந்த வழியாக செல்லும் வெளியூர் சுற்றுலா பயணிகள் கல்லட்டி மலைப்பாதையில் விபத்தில் சிக்கி வருவது தொடர்கதையாக உள்ளது. இந்த சூழலில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த சாலைகள் வழியாக சுற்றுலா பயணிகள் செல்ல கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் உள்ளூர் மக்களை தவிர்த்து வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்தது. மசினகுடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற இணைப்புச் சாலைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நீதிமன்றத்தின் தடை இதனால் வரைக்கும் அமல்படுத்தாமல் இருந்து வந்தது.இந்த சூழலில், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை உத்தரவு இன்று முதல் அமல்படுத்த உள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மசனகுடி சிங்காரம் மாயா மற்றும் வெகாபுரம் விபூதி மலை சாலையில் செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மசினகுடி, மாயார், சிங்காரா, விபூதி மலை சாலைகளில் இன்று முதல் அங்கீகரிக்கப்பட்ட சவாரி ஜீப்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வெளியூர் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதேநேரத்தில் உள்ளூர் வாகனங்கள் மேற்கண்ட சாலைகளை பயன்படுத்த எந்தவித தடையும் இல்லை என்று தெரிவித்து உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-ban-on-tourist-vehicles-on-the-masinagudi-road-starting-today




