வாஷிங்டன், 4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். நியூயார்க் - சியாட்டில் மோதல் இந்நிலையில், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 25வது லீக் ஆட்டத்தில் எம்.ஐ. நியூயார்க் - சியாட்டில் ஓர்காஸ் மோதின. இதில் டாஸ் வென்ற சியாட்டில் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூயார்க் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தஜிந்தர் அதிகபட்சமாக 66 ரன்கள் சேர்த்தார். நியூயார்க் வெற்றி இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சியாட்டில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சியாட்டிலை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்.ஐ. நியூயார்க் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய நியூயார்க் அணியின் ஷெபர்டு, போலர்டு தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/mi-new-york-beats-seattle-orcas-in-major-league-cricket




