சென்னை, மதுரவாயல்- துறைமுக சாலைப்பணிகள் செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரை ஆற்றுப்பகுதிகளில் நடைபெறாது' என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரவாயல்-துறைமுகம் சாலை சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே ரூ.5 ஆயிரத்து 600 கோடியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதில் தற்போது 22 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கூவம் ஆற்றின் மேல்புறம் 15.5 கி.மீ. தொலைவுக்கு இந்த மேம்பாலம் அமைகிறது. மழை காலங்களில் அதாவது, செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரை இப்பணிகள் ஆற்றுப்பகுதிகளில் நடைபெறாது. இந்த திட்டம் வருகிற 2029-ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும். மேல்நிலை சாலை திட்டம் இதுதவிர கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டி வரையிலான மேல்நிலை சாலை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.3 ஆயிரத்து 186 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்துடன் சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திட்டத்தை இணைக்கவும் ஆய்வுகள் நடந்து வருகிறது. இவை தவிர நடப்பு நிதியாண்டில் ரூ.3 ஆயிரத்து 98 கோடியில் செங்கல்பட்டு- திண்டிவனம் நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மேம்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி அத்துடன் ரூ.147 கோடியில் திண்டிவனம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை விபத்து நேரிடாத சாலையாக 7 இடங்களில் மாற்ற விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. பொதுவாக தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்படுவது வழக்கம். இதைதவிர சாலையை பயன்படுத்துவோரின் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த தொலைவுக்குள் மேலும் சில சுங்கச் சாவடிகளையும் அமைப்பதுண்டு என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-maduravoyal-harbour-flyover-works-strike-in-the-river-area-from-september




