கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகேயுள்ள பெருமாள் முடி மற்றும் மேல்முடி ஆகிய மலைப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக இக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மலைப்பகுதிகளிலுள்ள கோவில்களில் வனச்சூழலை மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாவட்ட அளவிலான இணைய வழி ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெருமாள்முடி இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கூறியதாவது, “புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள்முடி மற்றும் மேல்முடி கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இந்த இரண்டு கோவில்களும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், அதிக அளவில் பக்தர்கள் கூடுவது வனப்பகுதியை பாதுகாத்தல், வன உயிரினங்கள் மற்றும் பல்லுயிர்களை பாதுகாத்தல், குப்பைகள் சேராமல் தடுத்தல், காட்டுத்தீ ஏற்படாமல் தடுத்தல் மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது போன்றவற்றில் சிரமங்கள் ஏற்படுகின்றன. பெருமாள்முடி இதனை தவிர்க்கும் வகையில் பெருமாள்முடி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாங்கரை சோதனைச் சாவடியை பயன்படுத்த வேண்டும். மேல்முடி செல்லும் பக்தர்கள் பாலமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடி வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். தடாகம் வழியாக செல்ல தடை செய்யப்படுகிறது. மேல்முடி மற்றும் பெருமாள்முடி செல்லும் பக்தர்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், தரிசனம் முடித்த பக்தர்கள் மாலை 4 மணிக்குள் அந்தந்த சோதனைச் சாவடியை வந்தடைய வேண்டும். இனிவரும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள்முடி கோவிலுக்கு அதிகபட்சம் 1,000 எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பெருமாள்முடி மேலும், வாகனங்களின் நுழைவு எண்ணிக்கை மொத்தமாக அதிகபட்சம் 250 மட்டுமே. அதேபோல், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மேல்முடி கோவிலுக்கும் மொத்தமாக அதிகபட்சம் 500 எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும், வாகனங்களின் நுழைவு எண்ணிக்கை அதிகபட்சம் 150 மட்டுமே. வனப்பகுதியை சுத்தம் செய்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுக்காக, ஒரு நபரிடமிருந்து ரூ.15 பாதுகாப்புக் கட்டணம் வசூலிக்கப்படும். சுகாதாரத்துறையினரால் முறையான உடல்நலப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, பக்தர்கள் மலையேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார். ’டிரைவர் பொண்ணு, மூணு வருச கடும் உழைப்பு.’ - பி.டி.உஷா சாதனையை முறியடித்த வித்யாவின் தாய் உருக்கம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/restrictions-imposed-on-devotees-visiting-the-perumal-mudi-and-mel-mudi-temples-in-coimbatore




