கடந்த 5 நாள்களாக, தங்கம் விலை இறங்குமுகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் இந்த 5 நாள்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.865-உம், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.6,920-உம் குறைந்துள்ளது. ஏன் இந்தச் சரிவு? சர்வதேச தங்கச் சந்தையின் பிரதிபலிப்பே இந்திய சந்தையில் தங்கம் விலை குறைந்ததற்குக் காரணம். ஈரான் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் (28.34 கிராம்) 3,900 டாலர் அளவிற்குக் குறைந்தது. Gold - தங்கம் இந்த விலை அதிர்ச்சியாகப் பார்க்கப்பட்டதற்குக் காரணம், கடந்த ஜனவரி மாதம் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,200 டாலருக்கும் மேல் வர்த்தகமாகி வரலாற்று உச்சத்தைத் தொட்டது. அதிலிருந்து 1,000 டாலர்களுக்கு மேல் சரிவு என்பது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சிச் செய்தியாக இருந்தது. ஆனால், இந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டு தங்கம் விலை கடந்த மாதத்தின் இறுதியில் 4,600 டாலர்களைத் தாண்டியது. இந்த ஏறுமுகம் தொடரும் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், மீண்டும் தங்கம் விலை சரிவை நோக்கி நகர்ந்துள்ளது. இதற்கான காரணங்கள் என்ன? இந்தச் சரிவிற்கு 3 மிக முக்கிய காரணங்களைக் கூறலாம். முதலாவது, ஈரான்-அமெரிக்கா போர் ராணுவ ரீதியில் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால், சரக்குப் போக்குவரத்து மீண்டும் தீவிரமாகப் பாதிக்கப்படலாம். ஆக, பணவீக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இரண்டாவது, இந்தப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தும். தங்கம் மூன்றாவதாக, இந்த உயர்வால் பத்திர வருவாய் அதிகரிக்கலாம். இதனால், முதலீட்டாளர்கள் தங்கத்தைத் தாண்டி, இந்த மாதிரி வருவாய் தரும் முதலீடுகளுக்குத் தங்களது முதலீடுகளை மாற்றுவார்கள். ஆக, தானாகத் தங்கம் விலை உயரும். இப்போதுதான் நல்ல சான்ஸ்! சர்வதேச சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை 6.42 சதவிகிதம் சரிந்துள்ளது. ஆக, இந்த வாரத்தில் தங்கச் சந்தையில் அதிக Volatility இருந்தது. இனியும் இருக்கலாம். அதனால், தங்கச் சந்தையில் சூப்பரான டிரேடிங் வாய்ப்பு உள்ளது. இதை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தியாவில் தற்போது பண்டிகை சீசன். இந்த விலை குறைவைப் பயன்படுத்தி, தேவையிருந்தால் தங்க நகைக்கூட வாங்கலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/personal-finance/gold/gold-prices-fall-why-is-the-yellow-metal-losing-value




