‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிவேகமாக 35 கோடி பார்வைகளை கடந்துள்ளது. வால்மீகி எழுதிய ராமாயணம் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரகுமான் - ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணி இந்தப் படத்திற்கு இந்தியாவின் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. இந்த படத்தின் இந்தி தியேட்டர் விநியோக உரிமையை 'தர்மா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சுமார் ரூ.250 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. டிரெய்லர் அறிவிப்பு பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த ஜூலை 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. டிரெய்லர் வெளியீடு ஒத்திவைப்பு ‘ராமாயணா’ படத்தின் டிரெய்லரை கடந்த 24ஆம் தேதி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், சர்வதேச அளவில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததையடுத்து, டிரெய்லர் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் நமீத் மல்ஹோத்ரா திடீரென அறிவித்தார். டிரெய்லர் காட்சிகள் கசிவு: சமீபத்தில் புதுடெல்லியில் நடந்த 'பிரதம் சங்கல்ப்' நிகழ்ச்சி மற்றும் அமெரிக்காவின் சான் டியாகோ காமிக்-கான் நிகழ்வுகளில் திரையிடப்பட்ட டிரெய்லரின் சில முக்கிய காட்சிகள், செல்போனில் ரகசியமாக படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன. லீக் செய்யப்பட்ட வீடியோக்களில், ரன்பீர் கபூரின் ராமர் தோற்றம் மற்றும் பிரம்மாண்ட காட்சி அமைப்பு, சீதையாக நடித்துள்ள சாய் பல்லவியின் எமோஷனல் காட்சிகள், ராவணனாக வரும் நடிகர் யாஷின் கம்பீரமான தோற்றம், உயர்தர கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. “ராமாயணா” டிரெய்லர் வெளியானது ‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் ஜூலை 30ம் தேதி காலை 4:15 மணிக்கு (பிரம்ம முகூர்த்தத்தில்) வெளியானது. பிரமாண்ட விஷுவல் எபெக்ட்ஸ், வலுவான பின்னணி இசை, கதாபாத்திரங்களின் தோற்றம் மற்றும் காட்சியமைப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ‘ராமாயணா’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. டிரெய்லரின் முதல் காட்சியே ராவணனான யாஷ், எப்படி அரசனாக மாறினார் எனக் காட்டப்பட்டு பின் ராமனை அறிமுகம் செய்கின்றனர். நேரடியாக இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் மற்ற பான் இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. 35 கோடி பார்வைகளை் பெற்ற “ராமாயணா” டிரெய்லர் இந்த நிலையில், ‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் யூடியூபில் 35 கோடி பார்வைகளைப் பெற்று அசத்தியுள்ளது. மிக விரைவாக இந்த சாதனையைச் செய்த பான் இந்தியப் படமாகவும் மாறியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/ramayana-movie-trailer-crosses-350-million-views




