நியூயார்க், இன்று ‘உலக மனிதநேய நாள்’. உலகம் முழுவதும் போர் மற்றும் இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்து வரும் மனிதநேயப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையிலும், மனிதாபிமானக் காரணங்களுக்காக தங்களது இன்னுயிரை இழந்தவர்களையும் நினைவு கூரும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. பின்னணி என்ன? 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள கனால் ஹோட்டல் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில், ஈராக்கிற்கான ஐ.நா. சிறப்புப் பிரதிநிதியான செர்ஜியோ வியரா டி மெல்லோ உட்பட 22 மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சுவீடன் கொண்டு வந்த ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் நாள் உலக மனிதநேய நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில், நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வு மட்டுமின்றி, மனிதாபிமானப் பணியாளர்களின் பாதுகாப்புக்காகவும் வாதிடுவதற்கு, மனிதாபிமான அமைப்பின் பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைத்து குரல் கொடுக்கப்படுகிறது. கருப்பொருள் 2026-ம் ஆண்டின் கருப்பொருள் -மனிதாபிமானத்துக்காகச் செயல்படுதல், பொதுமக்கள் மற்றும் மனிதநேயப் பணியாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. மேலும் “கவலை தெரிவிப்பது மட்டும் போதாது; நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது” என்பதே இந்த ஆண்டின் முக்கிய வலியுறுத்தலாக உள்ளது. பாதுகாப்பு உறுதி உதவி செய்யும் இவர்களும் தாக்குதல், கைது உள்ளிட்ட ஆபத்துகளை எதிர்க்கொண்டு வருகின்றனர். இவர்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அவர்களின் உதவியை நம்பியிருக்கும் மக்களையும் பாதிக்கிறது. ஆயுதமேந்திய ட்ரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களால் போரின் தன்மை மாறி வருகிறது. ஆனால், எந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும் பொதுமக்கள் மற்றும் மனிதநேயப் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது இந்த உலக மனிதநேய நாளில், மனிதநேயப் பணியாளர்களையும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களையும் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/today-is-world-humanitarian-day-act-for-humanity




