புதுடெல்லி, நாடாளுமன்றம் செயல்படாததற்கு அரசாங்கமும், மோடி ஜியும், உள்துறை மந்திரியும்தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார். நாடாளுமன்றம் முடக்கம் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொடர்ந்து 4-வது வாரமாக இன்றும் இரு அவைகளையும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முடக்கி வைத்துள்ளனர். இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் கார்கே பேசியதாவது: மாணவர்கள் மீதான நடவடிக்கை குறித்து அமித் ஷா அவைக்கு வந்து அறிக்கை அளிக்க வேண்டும் என்பது மட்டுமே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள ஒரே கோரிக்கையாகும். உள்துறை மந்திரியை அறிக்கை அளிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தாதது ஏன்? அவர்கள் அவை செயல்படுவதை விரும்பவில்லை, அவர்கள் பயப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் சில தவறுகளைச் செய்துள்ளனர். பிரதமரின் புகைப்படம் நாள்தோறும் செய்தித்தாள்களில் வருகிறது, அப்படியிருக்க நாடாளுமன்றத்துக்கு வருவதில் என்ன சிக்கல்? அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு தீர்வைக் கோருகின்றனர். அவைத் தலைவர் ஏன் எங்களைப் பேச அனுமதிப்பதில்லை? என்பதை வருத்தத்துடன் நான் கேட்க விரும்புகிறேன். நாங்கள் வெறும் அறிக்கையைத்தான் கோருகிறோம். நாடாளுமன்றம் செயல்படாததற்கு மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் தான் காரணம் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/why-is-the-pm-not-asking-the-home-minister-to-make-a-statement-mallikarjun-kharge




