சென்னை, கரூர் சென்ற முதல்-அமைச்சர் விஜய், கரூர் போலீசார் நினைத்திருந்தால் எங்களை எச்சரித்து, அன்று கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம்.கூட்டத்துக்கு ஏற்றபடி போலீஸ் பாதுகாப்பு தந்தீர்களா?அன்று ஸ்டாலின் சார் அரசியல் ஆதாயம் தேடினார்.என் குடும்ப உறவுகளை இழந்து வலியில் இருந்த என் மேலேயே பழியை போட்டீர்கள். அந்த வலியோடு வீட்டில் இருந்தேன். அப்போது என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் என்று சொன்னீர்களே. வாய்னு ஒண்ணு இருந்தா என்ன வேணும்னாலும் பேசுவீங்களா? என அவர் கேள்வி எழுப்பினர். திமுக பதிலடி இந்த நிலையில் இதைவிட மோசமான ஒரு பொய்யை முதல்-அமைச்சர் சொல்ல முடியாது அடிப்படை அறிவுள்ள மனிதர்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும் கரூரில் முதல்வர் விஜய் பேசியதற்கு திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக டி.கே.எஸ்.இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- கரூரில் நிலவிய உண்மையான சூழல் என்ன? கலவரம் வெடித்ததா அல்லது பேரிடர் ஏதேனும் ஏற்பட்டதா?அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. மதியம் 12 மணிக்கு விஜய் உரையாற்றுவார் என நினைத்து 9 மணிக்கே மக்கள் வந்தனர். தாமதமாக வந்தார் விஜய் விஜய்யை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் முன்னரே வந்து காத்துக்கிடந்தனர். உட்காரக்கூட இல்லை, கிட்டத்தட்ட 12 மணிநேரம் வெயிலிலேயே நின்றனர். 7.30 மணிக்குத்தான் விஜய் வந்தார். சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீர், உணவு இல்லாமல் ஒருவர் நின்றால் மயங்கி விழுவார்கள் என்பது குறைந்தபட்சம் பொது அறிவும், மனிதநேயமும் உள்ளவர்களுக்கு தெரியும். 10 மணிநேரம் தண்ணீர், உணவு இல்லாமல் விஜய் நின்றாக்கூட மயங்கிதான் விழுவார். இது முழுவதும் தாமத்தின் விளைவு. ஆனால் அவர் திமுகவை குற்றம் சாட்டுவதில்தான் இருக்கிறார். 100 பேர் மயங்கியதில் 41 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 60 பேரை திமுக காப்பாற்றியது. விஜய் காப்பாற்றவில்லை. அதைமுதலில் அவர் புரிந்துகொள்ள வேண்டும். திமுக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்னைக்கு ஓட்டம் இதற்கிடையே சென்னைக்கு ஓடினாரே தவிர, பாதிக்கப்பட்டவர்களை சென்று ஒருமுறைக்கூட பார்க்கவில்லை. தாமதத்தின் விளைவுதான் இந்த விபத்து என்பதை அவர் முதலில் உணரவேண்டும். கரூரில் விஜய் தாமதமாக சென்றதுதான் உயிரிழப்புக்கு காரணம். பலரை மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றியது திமுக அரசு. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/vijays-late-arrival-in-karur-was-the-reason-for-the-death-tks-ilangovan




