சென்னை, விழாக்காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சரியான நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆம்னி பஸ் உரிமையாளர்கள் இதுதொடர்பாக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- அன்புடையீர், வணக்கம். தமிழ்நாட்டில் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஆம்னி பஸ்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. 2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, அன்றைய போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்துத்துறை ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில், நமது சங்கம் நிர்ணயம் செய்திருந்த அதிகபட்ச ஆம்னி பஸ் பயணக் கட்டணத்திலிருந்து 10 சதவீதம் குறைத்து வசூலிக்க அரசு அறிவுறுத்தலின்படி பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. கட்டண விவரங்கள் மேற்கண்ட கட்டண விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், நமது சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதே நடைமுறையை எதிர்வரும் அனைத்து விழாக்காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களிலும் நமது ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முழுமையாகப் பின்பற்றுமாறு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். விழாக்காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்களிடையே புகார்கள் ஏற்படாத வகையிலும் ஆம்னி பஸ் துறையின் நற்பெயர் பாதுகாக்கப்படும் வகையிலும், அனைத்து உரிமையாளர்களும் சங்கத்தின் இந்த அறிவுறுத்தலுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/omni-bus-owners-decide-not-to-exceed-the-maximum-fare-approved-by-the-government




