புதுடெல்லி ராமர் கோவிலில் நடந்த திருட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கை பெருமளவில் திருடப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டு வந்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 70 முறை இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக்குழு வழங்கிய முதற்கட்ட அறிக்கை அடிப்படையில் இந்த கைது நடவடிக்கைகள் நடந்தன. இந்த முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக அவினாஷ் சுக்லா (வயது 30) அடையாளம் காணப்பட்டு உள்ளார். விசாரணை அறிக்கையில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ள இவர், 40 நாட்களில் 70 முறை ராமர் கோவில் காணிக்கையை திருடி உள்ளார். சொகுசு கார் காணிக்கை எண்ணும் பணியின்போது, பெரிய மதிப்பு கொண்ட பணக்கட்டுகளையும், சில்லறை ரூபாய் நோட்டுகளையும் திருடி மறைப்பது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கிறது. கண்காணிப்பு கேமரா பதிவுகள், அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள், வங்கிக்கணக்கு விவரங்கள் மற்றும் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் அடிப்படையில் அவினாஷ் சுக்லாவுக்கு பெரும் பங்கு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவரது வீட்டில் இருந்து அதிக அளவில் பணம் கைப்பற்றப்பட்டது. அந்த வகையில் ரூ.20.39 லட்சம் பணம், 1,121 அமெரிக்க டாலர், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், சொகுசு கார் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. காணிக்கை எண்ணும் பணிக்காக ரூ.15 ஆயிரம் மட்டுமே அவினாஷ் சுக்லா சம்பளமாக பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு அவினாஷ் சுக்லா தவிர, அனுகல்ப் மிஸ்ரா, லவகுஷ் மிஸ்ரா, மணீஷ் குமார் யாதவ், கருணேஷ் பாண்டே, ராம்சங்கர் மிஸ்ரா, சுபாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் டின்னு என்கிற ராம்சங்கர் யாதவ் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த முறைகேடு தொடர்பாக நியாயமான, காலவரையறையுடன் கூடிய சி.பி.ஐ. விசாரணை கோரி, ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி. சுதாகர்சிங் உள்பட 3 தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் 3 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த பொதுநல மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி, மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நாளை மறுநாள் (13-ந்தேதி) விசாரணைக்கு வருகிறது. இந்த மனுக்களில், நீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய விசாரணை மற்றும் தடய அறிவியல் தணிக்கையும் அவசியம் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/ram-temple-theft-case-hearing-scheduled-for-the-day-after-tomorrow




