மும்பை மலாடு பகுதியில் மூடப்பட்டு இருந்த கிளினிக் ஒன்றில் இருந்து தொடர்ந்து துர்நாற்றம் வந்து கொண்டிருந்தது. அந்த கிளினிக்கிற்கு வெளியில் கேட்டில் 'டேகேர் சென்டர்' விரைவில் திறக்கப்படும் என்று ஒரு அறிவிப்பு பலகை தொங்கியது. உள்ளே யாரும் செல்ல முடியாதபடி இரும்பு கேட் போடப்பட்டு இருந்தது. உள்ளே இருந்து வந்த துர்நாற்றம் தாங்க முடியாத காரணத்தால் பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அந்த கிளினிக்கை திறந்து பார்த்தபோது உள்ளே குளிர்சாதன அறையில் ஒரு இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. அதனை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு இது குறித்து போலீஸார் மேற்கொண்டு விசாரித்தபோது பல உண்மைகள் தெரிய வந்தது. இறந்து போன அந்த நபர் கடந்த 2022ம் ஆண்டு மாரடைப்பால் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. தந்தையை நெருக்கமாக வைத்திருக்க விரும்பிய அவரது மகள், அவரது உடலைப் பாதுகாக்க முடிவு செய்தார். இறுதிச் சடங்குகளைச் செய்து உடலைத் தகனம் செய்வதற்குப் பதிலாக, அந்தப் பெண் தனது தந்தையின் உடலைப் பாதுகாக்க தனியார் கிளினிக் ஒன்றின் உதவியை நாடி இருக்கிறார். இறந்து போன 80 வயது நபரின் வயதான மனைவி மற்றும் மகள் மும்பையில் வசிக்கின்றனர். மேலும் அவரது மரணத்தால் தாங்கள் மிகவும் உடைந்துவிட்டதாகவும், முடிந்தவரை நீண்ட காலத்திற்கு சடலத்தைப் பாதுகாப்பதற்காக அமெரிக்காவில் உள்ள கிரையோனிக்ஸ் மையத்திற்கு மாற்ற விரும்புவதாகவும் அந்த நபரின் மகள் தெரிவித்துள்ளார். புதுப்பிப்புப் பணிகளுக்காக அந்தக் கிளினிக் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டிருந்தது. போலீஸார் அந்த நபரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது இயற்கையாக இறந்ததற்கான சான்றிதழைத் தாக்கல் செய்தனர். மேலும் சட்டப்பூர்வமாக இறந்தவர்களின் உடல்களை மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாத்து வைக்கும் 'கிரையோனிக்ஸ்' (cryonics) தொழில்நுட்பத்தை வழங்கும் அமெரிக்க நிறுவனங்கள் குறித்து இணையத்தில் தேடி தாங்கள் அறிந்துகொண்டதாக அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர். அந்த உடலை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்ல முடியுமா என்பது குறித்து அத்தகைய நிறுவனம் ஒன்றிடம் அக்குடும்பத்தினர் தொடர்பு கொண்டு பேசத் தொடங்கினர். மேலும், இந்தியாவிலேயே அந்த உடலைப் பாதுகாத்து வைப்பதற்கான சட்டப்பூர்வ அம்சங்கள் குறித்தும் அவர்கள் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தினர். இதற்கிடையில், சடலம் கிளினிக்கில் இருந்தது குறித்து அதன் நிர்வாகமோ அல்லது குடும்பத்தினரோ உள்ளூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. 2022 முதல் கிளினிக் நடவடிக்கைகளுக்காக வளாகத்தை வாடகைக்கு விட்ட உரிமையாளருக்கும் உடல் இருப்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. மும்பை ஐஐடி: 412 பேராசிரியர்களில் 5 பேர் மட்டுமே பட்டியல் சமூகத்தவர்கள்; RTI சொல்லும் தகவல் என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/crime/mumbai-woman-kept-deceased-fathers-body-at-clinic-for-four-years




