பினராயி விஜயன் கேரள முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், கொச்சியைச் சேர்ந்த தனியார் தாது மணல் நிறுவனமான சி.எம்.ஆர்.எல் கம்பெனியிடம் அவரது மகள் வீணாவின் எக்ஸாலாஜிக் நிறுவனம் மூலம் முறைகேடாக பணம் கைமாறியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகச் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியது. விசாரணையின் தொடர்ச்சியாக, கடந்த காலங்களில் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள், எக்ஸாலாஜிக் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் வீணா விஜயனுக்கு விளக்கம் கேட்டு அடுத்தடுத்து சம்மன்கள் அனுப்பப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின் முடிவில், சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திடமிருந்து மகள் வீணா மூலம் பினராயி விஜயன் லஞ்சப் பணம் பெற்றதாகவும், அந்தத் தொகை ஹவாலா வழிகள் மூலமாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியது. மேலும், வீணா தனது கைப்பட எழுதிய சில முக்கிய குறிப்புகளையும், ஆவணங்களையும் பறிமுதல் செய்த அமலாக்கத்துறை, முன்னாள் அமைச்சர் முகமது ரியாஸ் தனது நண்பர்களின் உதவியோடு இந்த ஹவாலா பரிவர்த்தனைகளை ஒருங்கிணைத்து நடத்தியதாகவும் குறிப்பிட்டது. இதையடுத்து, பணமோசடி தடுப்புச் சட்டம் பிரிவு 66(2)-ன் கீழ் தங்களுக்குக் கிடைத்த முக்கிய ஆதாரங்களை கேரள மாநிலக் காவல்துறையிடம் ஒப்படைத்த அமலாக்கத்துறை, பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி-க்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியது. வீணா விஜயன், முஹம்மது ரியாஸ் டி.ஜி.பி அந்தக் கடிதத்தை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து, அட்வகேட் ஜெனரலிடம் சட்ட ஆலோசனை கோரப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படி, மத்திய விசாரணை அமைப்பு முறைப்படி ஆதாரங்களுடன் அளிக்கும் பரிந்துரைக் கடிதத்தைப் புறக்கணிக்க முடியாது என்றும், அதன் மீது விசாரணை மேற்கொள்வதில் சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லை என்றும் அரசுக்கு சட்ட ஆலோசனை கிடைத்தது. "துபாய்க்குச் செல்பவர்கள் எல்லாம் ஹவாலா பணத்தைக் கடத்துபவர்களா?"- பினராயி விஜயனின் மருமகன் ஆவேசம்! இதன் அடிப்படையில், முதலமைச்சர் வி.டி.சதீசனை நேரில் சந்தித்து நிலைமையை விளக்கினார் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா. அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் பரிந்துரையை ஏற்று கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா விஜயன் மற்றும் மருமகனும் முன்னாள் அமைச்சருமான பி.ஏ.முகமது ரியாஸ் ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்த மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உடனடியாக விசாரணையைத் தொடங்குமாறு டி.ஜி.பி-க்கு முறைப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா, “சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை திரட்டிய ஆதாரங்களைப் பிரிவு 66(2)-ன்படி காவல்துறையிடம் பகிர்வது அவர்களின் கடமை. அத்தகைய பரிந்துரைகளை அரசு புறக்கணிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத் தீர்ப்பே உள்ளது. சட்ட ஆலோசகரின் கருத்துப்படி, முதல்வர் உடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னரே டி.ஜி.பி-க்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக எப்.ஐ.ஆர் பதியப்படாமல் தொடக்க நிலை விசாரணையாக இது முன்னெடுக்கப்படும். எத்தகைய விசாரணை முறை என்பது குறித்து டி.ஜி.பி முடிவெடுப்பார்" என்றார். கேரளம்: தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் புகுந்து நேரலையை முடக்கிய போலீஸ்; பினராயி விஜயன் கண்டனம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/kerala-government-accepting-ed-recommendation-to-investigate-pinarayi-vijayan




