வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து கோடிக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டது, 'படிவம் 6'-ல் விதிகளை மீறி மாற்றங்கள் செய்தது, தரவுத்தளத்தை மத்தியமயமாக்கியது, தேர்தல் ஆணையர்களின் அனுமதியின்றி பல உத்தரவுகள் வெளியானது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் முன்வைத்திருக்கின்றனர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் புலனாய்வு கட்டுரை வெளியிட்டது. மேலும், முக்கிய முடிவுகள் தங்கள் கவனத்திற்கு வராமலேயே எடுக்கப்படுவதாக இரு ஆணையர்களும் 10 மாதங்களில் 14 முறை எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஆனால் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டு முடிவுகள் மேற்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர் இதனால், தேர்தல் ஆணையத்திற்குள் அதிகாரிகளிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென ஏராளமான எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் Gen-Z இளைஞர்களிடமிருந்து வாக்குரிமையை அப்பட்டமாகப் பறிக்கும் சதியில் அமித் ஷாவுடன் சேர்ந்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஈடுபட்டிருக்கிறார் என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார். "நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை; அதனால் வேளாண் அமைச்சர் ஆக்குகிறோம் என்றார்" - யாரைச் சொல்கிறார் சீமான்? இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பாக விளங்கும் முதன்முறை வாக்காளர்களான 18 வயது Gen-Z இளைஞர்களிடமிருந்து வாக்குரிமையை அப்பட்டமாகப் பறிக்கும் சதியில் அமித் ஷாவுடன் சேர்ந்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஈடுபட்டு வந்திருப்பது இப்போது வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 1958-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைமுறையில் இருந்துவந்த வருடாந்திர சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (SSR) 2024 ஜனவரிக்குப் பிறகு முடக்கி வைத்து, லட்சக்கணக்கான புதிய தலைமுறை இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் இணையவிடாமல் இவர் தடுத்து நிறுத்தி வந்திருப்பது ஆதாரங்களுடன் தற்போது அம்பலமாகியுள்ளது. அமித்ஷா நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்தும், நாட்டின் ஜனநாயக அமைப்புகள் ஆளும் பாஜகவின் பிடிக்குள் சிக்கிச் சீரழிக்கப்பட்டு வருவது குறித்தும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எச்சரித்து வந்த உண்மை இப்போது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெளிவாகப் புரிந்துவிட்டது. இளைஞர்களின் மாற்றத்திற்கான குரலையும், மோடி அரசின் அநீதிகளை எதிர்க்கும் இளைஞர் சக்தியையும் தேர்தல் களத்திற்கு வரவிடாமல் திட்டமிட்டுத் தடுக்கும் அற்ப அரசியலில் தலைமை ஆணையர் ஈடுபட்டு வந்தது இதன்மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளத்தையே சிதைத்து, லட்சக்கணக்கான இளைஞர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் துரோகத்தில் ஈடுபட்டு வந்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இதற்கு முழுப் பொறுப்பேற்று உடனடியாகத் தனது பதவியை விட்டு வெளியேற வேண்டும். Gyanesh, it’s over agent" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/gnanesh-kumar-is-involved-with-amit-shah-alleges-manickam-tagore




