சென்னை, 7 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய வயது பிரிவு நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. அப்துல் ஹபீஸ் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வரும் 12-வது ஆசிய வயது பிரிவு நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற தமிழ்நாட்டை சேர்ந்த அப்துல் ஹபீஸ், 200 மீட்டர் பட்டர்ப்ளை பிரிவில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்க பதக்கத்தை வென்றார். இதன் மூலம், ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கி தந்த வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். எம்.எஸ். நிதீஷ் அதேபோல், 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் போட்டியிட்ட எம்.எஸ். நிதீஷ், ஆசியாவின் முன்னணி நீச்சல் வீரர்களுடன் கடும் போட்டிக்கு பிறகு வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி, இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை பெற்று தந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/othersports/gold-at-the-asian-level-swimming-competition-after-7-years-tamil-nadu-athlete-shines




