சென்னை, எம்.எல்.ஏ.க்களுக்கு கார் தமிழக சட்டசபையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி சமீ பத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். ஏழ்மை நிலையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் நேர்மையாக இருக்கும் வகையில் அவர்களுக்கு கார் மற்றும் உதவியாளர்களை அரசே கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கையை உடனடியாக முதல்-அமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டு அதற்கான அறிவிப்பை சட்டசபையிலேயே வெளியிட்டார். அந்த அறிவிப்பை அவர் வெளியிட்ட மறுநாளிலேயே, மஹிந்திரா நிறுவனத்தின் குறைந்தபட்சம் ரூ.9 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.26.18 லட்சம் வரை மதிப்பிலான 6 மாடல் கார்கள் நேற்று தலைமைச் செயலகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. டெஸ்ட் டிரைவ். மஹிந்திரா நிறுவனத்தின் XUV 7XO, XUV 3XO, Scorpio-N, Scorpio Classic, Bolero மற்றும் Bolero Neo ஆகிய முன்னணி எஸ்.யு.வி (SUV) மாடல் கார்கள் தலைமைச் செயலக வளாகத்தில் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இந்தக் கார்களின் மைலேஜ், சொகுசு வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களுக்கான நம்பகத்தன்மை ஆகியவற்றை நேரில் பரிசீலித்து, டெஸ்ட் டிரைவ் செய்து வருகின்றனர். இந்த 6 மாடல்களில் எந்த வகையான கார் அவர்களுக்கு சரியாக இருக்கும் என்பது பின்னர் தேர்வு செய்யப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/steps-taken-to-select-cars-for-mlas




