KGF திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் யாஷ். இவர், பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் நிதீஷ் திவாரி, மெகா பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்டமான ' ராமாயணம் ' திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் யஷ், லங்கேஷ்வரனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான டிரெய்லரில், ராவணனாக யஷின் கம்பீரமான தோற்றமும், கம்பீரமான குரலும் திரையுலகை வியப்பில் ஆழ்த்தியது. இப்படத்தின் முதல் பாகம், தீபாவளியன்று நவம்பர் 8 அன்று உலகெங்கும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனுடன், கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் 'டாக்ஸிக்' என்ற தீவிரமான டார்க் ஆக்ஷன் திரில்லர் படத்திலும் யஷ் நடித்திருக்கிறார். நடிகர் யாஷ் - ராமாயணா இந்த நிலையில், நடிகர் யாஷ் சமீபத்தில் வெரைட்டி இந்தியாவுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் தன்னைப்பற்றி சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துகொண்டார். அந்தப் பேட்டியில், ``நான் பேய் படங்கள் அல்லது திகில் சார்ந்த படங்களைப் பார்க்கமாட்டேன். எனக்கு பயப்படுவது சுத்தமாகப் பிடிக்காது. பயப்படுவதற்காக நாம் ஏன் தியேட்டருக்குப் போய் பணம் செலவழிக்க வேண்டும்? திகில் படங்களைப் பார்ப்பது தேவையில்லாமல் நமது இதயத் துடிப்பை அதிகரிக்கும். அதனால்தான் நான் அந்த வகைப் படங்களிலிருந்து விலகி இருக்கிறேன். ஒரு திரைப்படம் என்பது நம்மை முழு மனதுடன் ரசித்து, உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டுமே தவிர, பயத்தில் நடுங்க வைப்பதாக இருக்கக்கூடாது" என்று யஷ் சிரித்துக்கொண்டே கூறினார். மலைகளையே நொறுக்கும் அளவுக்கு வலிமையான உடல்மொழியுடன் திரையில் தோன்றும் ராக்கிங் ஸ்டார், நிஜ வாழ்க்கையில் தனக்கு திகில் படங்களைக் கண்டு பயம் என்று கூறுயதை `என்னது ராக்கி பாய்க்கு, திகில் படம்னா பயமா!' என ரசிகர்கள் விளையாட்டாக கிண்டல் செய்து வருகின்றனர். KGF Yash: "நான் உனக்குத் துணையாக இருக்கிறேன்" - புற்றுநோய் பாதிக்கப்பட்ட ரசிகருடன் பேசிய நடிகர் யஷ்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/tollywood/actor-yash-has-stated-that-he-is-afraid-of-horror-movies



