சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தின் மின்னணு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மணலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளைப்பாக்கம் ஆகிய இரண்டு பகுதிகளில் சுமார் ரூ. 1,012 கோடி நிதிச் செலவில் மேலும் இரண்டு மின்னணு உற்பத்தி தொகுப்புகள் (EMCs) அமைக்க ஒப்புதல் அளித்துள்ள நமது பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த முன்னெடுப்பின் மூலம், இந்தியாவின் மிக முக்கிய மின்னணு உற்பத்தி மையங்களில் ஒன்றாக நமது தமிழகம் வலுப்பெற்றுள்ளது. மின்னணு உற்பத்தி உலகளவில் பெரும் புரட்சி செய்து வரும் இந்தியாவின் மின்னணு பொருட்கள் உற்பத்தி திட்டத்தின் மூலம், லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதோடு, நமது பாரதமும் தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும். “Make in India” மற்றும் “Digital India” உள்ளிட்ட நமது பாரதப் பிரதமரின் தொலைநோக்கு சிந்தனைகளுக்கு, உயிர் கொடுக்கும் இத்திட்டங்கள் நமது தமிழகத்தில் அமையப் பெறுவது அளவற்ற மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/approval-for-2-electronics-manufacturing-complexes-in-tamil-nadu-nainar-nagendran-thanks-prime-minister-modi




