‘ஹபீபி’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் இயக்கிய ‘ஹபீபி’ படம் கடந்த ஜுன் 12ல் வெளியானது. கடையநல்லூரிலுள்ள இஸ்லாமியர்களின் வாழ்வியலைப் பேசும் படமாக உருவான இதில் நாயகனாக ஈசாவும் நாயகியாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். கதை வி எஸ் முகமது அமீன் எழுதியுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் நேசம் என்டர்டெயின்மென்ட் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இயக்குனர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கடையநல்லூர் பகுதியைச் சுற்றி 4 காலகட்டங்களில் நடக்கும் கதைகளில், ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறும் சாலைகள், வீடுகள், கடைகள் என சரியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நெசவுத் தொழிலை இஸ்லாமிய மக்கள் மேற்கொள்வது புதிய செய்தியாக இருந்தாலும் அதில் அந்த மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை வெளிக்கொண்டு வருவது, பொருளாதார மாற்றம் எப்படி குடும்பத்தை மாற்றுகிறது என்பதே படத்தின் மையக்கரு. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு இந்த நிலையில், ‘ஹபீபி’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/ott/habibi-film-ott-release-date-announced-where-and-when-can-you-watch-it




