தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரான தாரகை கத்பர்ட், ஆளுங்கட்சி வரிசையிலிருந்து திடீரென எதிர்க்கட்சிகளுக்கான முதலாவது வரிசைக்கு இடம் மாறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டிருக்கும் பதிவில், " சட்டமன்றத்தில் இருக்கை மாற்றம் என்பது வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதிதான். சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதன் காரணமாக, இருக்கை மாற்றப்பட்டுள்ளது. தாரகை கத்பர்ட் மேலும், கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் அமர்வை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சியின் இரண்டு மாண்புமிகு அமைச்சர்களும் முதல் வரிசையில் அமர்ந்துள்ளனர். மாண்புமிகு பேரவைத் தலைவர் இந்த மாற்றத்தை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு வழக்கமான இருக்கை மாற்றத்தை வைத்து, இல்லாத அரசியல் அர்த்தங்களை கற்பனை செய்து பரப்ப வேண்டாம். செய்தியை செய்தியாகவே பாருங்கள். அரசியலை கற்பனையாக உருவாக்க வேண்டாம்!" என்று பதிவிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/dont-create-imaginary-politics-manickam-tagore-explains-amid-opposition-row




