சென்னை, வீரமணியின் தோழி சாந்தியின் ஆடலை பார்க்க இணைய தளங்களில் ரசிகர்கள் இணைந்து இருக்கிறார்கள். இணையத்தில் இன்ஸ்டகிராம் பக்கத்தில் தினமும் வெளியிட்ட ரீல்ஸ் பார்வையாளர்களை சுண்டியிழுத்தது. விதவிதமான காஸ்ட்யூம்களில், வித்தியாசமான கெட்-அப்புகளில் சாந்தி டான்ஸ் ஆட்டம் போடும் ஒவ்வொரு ரீல்சையும் பார்த்து கிறுகிறுத்து போகாத குறைதான். சாந்தி அக்காவை டான்சில் அடிச்சுக்கவே முடியாது. இத்தனை வயதிலும் என்னமா ஆடுறாங்க. இப்படித்தான் அவரை பின்தொடர்ந்த வர்களெல்லாம் பேசிக்கிட்டாங்க. ஆனால் ஜெம் வீரமணி தொடர்பு அம்பலமாகியதும் இப்போது அந்த சாந்தி அக்காவா இப்படி.” என்று எல்லோரும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் மூக்கின் மேல் விரலை வைக்கிறார்கள். இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும் சாந்தியின் ஆடலும் பாடலும்தான் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது. "ஒருபட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே. அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே. காதல் சொல்ல வந்தேன். உன்னிடத்திலே வார்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே. அட காதல் இதுதானா. பூச்சுட பூ வேணுமா." இந்த பாடலுக்கு ஏற்றவாறு அவர் ஆடுவது கிறங்கவைக்கிறது. பெரும்பாலும் ரொமான்ஸ் நிறைந்த பழைய காதல் ரசம் சொட்டும் பாடல்களை ரசித்து அதற்கேற்ப தனது நடனத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். உலகம் சுற்றும் வாலிபனில் வரும் "அவள் ஒரு நவரச நாடகம், ஆனந்த கவிதையின் ஆலயம் தழுவிடும் இனங்களில் மானினம்.'."என்ற பாடலை எம். ஜி.ஆர். போலவே தொப்பி அணிந்து அசத்தலாக ஆடி இருக்கிறார். "மூக்குத்தி பூமேலே காற்று உக்கார்ந்து பேசுதம்மா. அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளுர ஊறுதம்மா. அது ஏந்தான் புரியலையே அதை நான்தான் அறியலையே." என்ற காதல் மோகத்தில் ஏங்கும் பாடலை சரிதாவை போலவே சாந்தியும் ஏக்கப் பார்வையுடன் ஆடி அசத்தி உள்ளார். "பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு. காவேரி போலே பொங்குற மனசு பாடாதோ தூது போரெயிலே ரெயிலே. துடிக்குது ஒரு குயிலே குயிலே. என்னென்னவோ என் நெஞ்சிலே." என்ற பாடலுக்கு ராதிகாவைப் போலவே கலக்கலாக ஆடி உள்ளார். "ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் குளிரில்லை. அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன்.மலரில் ஒளியில்லை.என்ற பாடலுக்கு தெய்வத்தாய் படத்தில் சரோஜாதேவியின் ஆடலை பார்த்து எம்.ஜி.ஆர். மயங்கி பாடுவார். அந்த சரோஜா தேவி போலவே அந்த பாடலுக்கு சாந்தியும் அடிபொலியாக ஆடி இருக்கிறார். "அட்டா என்ன அழகு அருகே வந்து பழகு அலை மேல் வைத்த மெழுகு அதுபோல் நீயும் உருகு" என்ற பாடலுக்கு ஜெயலலிதாவைப் போலவே மாடர்ன் உடையில் வந்து ஆடி கலக்கி இருக்கிறார். அந்தக்கால பாடல்கள் மட்டுமல்ல இந்த கால பாடல்களுக்கும் நான் ஆடுவதில் கில்லாடி என்பதை போல் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற "ஜாலி ஓ ஜிம்கானா." என்ற பாடலுக்கும் கலக்கலாக ஆடி இருக்கிறார். "இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா. ஆ. லலால்ல.லா. ல." என்று காசேதான் கடவுளடா என்ற பட பாடலுக்கு நிஜத்திலும் காசேதான் கடவுளடா என்ற தனது லட்சியத்தை பிரதிபலிப்பதாலோ என்னவோ சினிமா காட்சியை போலவே ஆடி அமர்க்களப்படுத்தி இருக்கிறார். 'பன்னீரில் நனைந்த பூக்கள்." என்ற பாடலுக்கும் அற்புதமாக தனது நடன திறளை ஆடி வெளிப்படுத்தி உள்ளார். "ஸ்ரீரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யுபடி" என்ற கர்நாடக இசைப் பாடலுக்கும் அற்புதமாக ஆடி உள்ளார். பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும். முள்ளிலாடும் நெஞ்சம், கள்ளில் ஊறும் கண்கள் தங்கத் தட்டில் பொங்கும் இன்பத்தேன் போல் பெண்கள். பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான என எண்ண வேண்டும். ஓ முள்ளிலாடும் நெஞ்சம். கள்ளில் ஊறும் கண்கள் தங்கத் தட்டில் பொங்கும் இன்பத்தேன் போல் பெண்கள்.ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் ராணியின் முகமோ. மல்லிகை என் மன்னன் மயங்கும்." என்று அவர் தேர்வு செய்த ஒவ்வொரு பாடலும் யாரையோ மயக்கியும், தன் உள்ளத்தை வெளிப்படுத்துவது போலவும் யதார்த்தங்களை தெரிவிப்பது போலவும் அமைந்த பாடல்களையே தேர்வு செய்து அதற்கேற்ப நடனம் ஆடி ரீல்ஸ் ஆக வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்தவர்கள் நிஜத்திலும் சொக்கித்தான் போவார்கள். நெற்றியிலே பொட்டு வச்சேன். நெஞ்சை அதில் தொட்டு வச்சேன். சிட்டுக் குருவி முத்தம் கொடுத்துட ரஜினி நடித்த வேட்டையன் படத்தில் வரும் "சேட்டன் வத்தலே சேட்டை செய்ய வந்தலே' ராமைய்யா. என்ற பாடலுக்கும் கலக்கலாக ஆடி உள்ளார். அவ்வப்போது சுதந்திர தினத்தில் நாட்டு பற்றோடும். ஓணம் பண்டிகையில் பக்தி பரவசத்தோடு அத்தப்பூ கோலம் போட்டு மலையாள பெண்கள் போலவே காஸ்ட்யூமில் மலையான பாடல்களுக்கும் ஆடி அசத்தி இருக்கிறார். இப்படி நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு ஏற்றவாறு அவர் ஆடி உள்ளார். ஒவ்வொரு பாடலுக்கும் ஏற்றவாறு காஸ்ட்யூம் போட்டு ஆடியதுதான் இவரது ஸ்பெஷாலிட்டி, அதனால்தான் சாந்தியின் ஆடலை பார்க்க இணைய தளங்களில் ரசிகர்கள் இணைந்து இருக்கிறார்கள். அவரது அசத்தல் நடனங்கள் இப்போது இணையதளங்களில் வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/veeramanis-friend-shanthis-medley-dances




