சென்னை, 2-வது தகுதி சுற்று போட்டி முடிவில் திருச்சி அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை அணி வெற்றி பெற்றது. டிஎன்பிஎல் 2வது தகுதி சுற்று போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், கோவை - திருச்சி அணிகள் விளையாடின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் கேப்டன் ஷாருக்கான், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 183 ரன்கள் குவிப்பு இதன்படி கோவை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல அடித்தளம் அமைத்த நிலையில், மிடில் ஆர்டரில் வந்த வீரர்கள் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக கடைசி ஓவர்களில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மூலம் கோவை வேகமாக ரன்களை உயர்த்தியது. 99 ரன்கள் இதனால் திருச்சி அணிக்கு 184 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மறுபுறம், இலக்கை துரத்த தொடங்கிய திருச்சி ஆரம்பத்திலேயே திணறியது. கேப்டன் ஜெயராமன் 48 ரன்கள் விளாசினார். எனினும், மற்ற வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமலும், சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால், 15.4 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்திருந்தபோது, திருச்சி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கோவை அணியின் மணிமாறன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். போட்டி முடிவில் திருச்சி அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை அணி வெற்றி பெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/second-qualifying-round-coimbatore-team-wins-by-84-runs




