இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பொழுதுபோக்காக சிலர் வீடியோக்களை வெளியிட்டு அதில் லட்சக்கணக்கில் சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர். அப்படி சம்பாதிக்கும் அதிகமானோர் வருமான வரி செலுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இது போன்ற சமூக வலைத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் வரும் வருமானத்திற்கும் கட்டாயம் வருமான வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் யூடியூப் விளம்பர வருவாய், இன்ஸ்டாகிராம் பிராண்ட் ஒத்துழைப்புகள், கமிஷன்கள், ரசிகர்களின் பங்களிப்புகள், உறுப்பினர் சந்தா கட்டணம், சூப்பர் சாட்கள், வணிகப் பொருட்கள் மற்றும் டிஜிட்டல் தயாரிப்புகள் மூலம் கிடைக்கும் வருவாயும் அடங்கும். இன்ஸ்டாகிராம், யூடியூப் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 31ம் தேதி நெருங்கி வருவதால், சமூக ஊடகங்களில் இருந்து தொடர்ந்து வருமானம் ஈட்டும் படைப்பாளிகள் தங்கள் கணக்குகளைச் தாக்கல் செய்யவேண்டும். 2025-26 நிதியாண்டிற்கு, ஆகஸ்ட் 31ம் தேதி காலக்கெடுவானது, வணிகம் அல்லது தொழில்முறை வருமானம் உள்ள மற்றும் கணக்குகள் தணிக்கை செய்யத் தேவையில்லாத வரி செலுத்துவோருக்குப் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பல படைப்பாளிகளைச் சிக்கலில் மாட்டிவிடக்கூடும். அவர்கள் பெரிய பிராண்ட் காசோலையை நினைவில் வைத்திருக்கலாம். ஆனால் சிறியதாகக் கிடைக்கும் வருமானத்தை மறந்துவிடலாம். இது குறித்து டெக் மாஸ்டர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அரவிந்த் கர்ரா கூறுகையில், ''படைப்பாளிகளின் வருமானம் வியத்தகு முறையில் மாறியுள்ளது. படைப்பாளிகளின் வருமானம் ஒரு யூடியூப் அல்லது ஒரு இன்ஸ்டாகிராம் பிராண்ட் ஒப்பந்தத்தைத் தாண்டிச் சென்றுவிட்டது. படைப்பாளிகள் ஒரு மாதத்தில் விளம்பரங்கள், பிராண்ட் ஒத்துழைப்புகள், கமிஷன் இணைப்புகள் உட்பட நான்கு அல்லது ஐந்து வருமானங்களைப் பெறுகின்றனர். பிரச்னை பணம் சம்பாதிப்பதில் இல்லை. அதைக் கண்காணிப்பதில் இருக்கிறது. வெவ்வேறு தளங்கள் வெவ்வேறு நேரங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் பணத்தை வழங்கலாம். வருமானத்தைத் வரி தாக்கல் செய்யும்போது ஒரு படைப்பாளி சில வருமானத்தைத் தவறவிடும் அபாயம் இருக்கிறது. எனவே தனக்கு வரும் வருமானம் தொடர்பாகச் சரியான முறையில் கணக்குகளைப் பராமரிக்க வேண்டும். வருமானத்தைத் தொடர்ந்து கண்காணிக்கும் படைப்பாளிகள் வரிச் சிக்கல்களின் ஆபத்தில் இருந்து தப்பிக்கிறார்கள்'' என்று தெரிவித்தார். வருமான வரி. மூலதன ஆதாய வரி. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? தெளிவான விளக்கம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/income-from-social-media-like-instagram-and-youtube-is-also-taxable




