பொதுவாக, அனைவருக்கும் கடற்கரைகள் என்றால் மிகவும் பிடிக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், தனியாக நேரத்தை கழிக்க விரும்புபவர்களுக்கும் அல்லது அமைதியை தேடுபவர்களுக்கும் கடற்கரைகள் ஒரு நல்ல தேர்வாக இருக்கிறது. ஆனால், உலகின் மிக நீளமான கடற்கரைகளை கொண்ட 10 நாடுகள் எது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அது பற்றிய விவரங்களை பார்க்கலாம். 1. கனடா உலகிலேயே மிக நீளமான கடற்கரையை கொண்ட நாடாக கனடா உள்ளது. அட்லாண்டிக், பசிபிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களை ஒட்டி அமைந்துள்ள கனடாவின் கடற்கரை 2 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2. நார்வே ஆயிரக்கணக்கான தீவுகள், பாறைகள் கொண்ட கடலோர பகுதிகளை கொண்டதாக நார்வே உள்ளது. இந்த நாட்டின் கடற்கரை 83 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 3. இந்தோனேசியா 17 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகளை கொண்ட இந்தோனேசியா, இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களுடன் தொடர்புடைய நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. நீண்ட தூர கடற்கரையை கொண்ட நாடுகள் பட்டியலில் 3-ஆம் இடம் வகிக்கிறது. 4. கிரீன்லாந்து சுமார் 44 ஆயிரம் கிலோமீட்டர் நீளமான கடற்கரையை கிரீன்லாந்து கொண்டுள்ளது. பெரும்பாலான பகுதிகள் பனிப்பாறைகள், மலை முகடுகளுக்கு இடையேயான கடல் பகுதிகள் மற்றும் ஆர்க்டிக் கடற்பகுதிகளால் சூழப்பட்டுள்ளன. 5. ரஷியா ஆர்க்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுடன் மட்டுமின்றி பல கடல்களையும் ஒட்டி அமைந்துள்ள ரஷியாவின் கடற்கரை 37 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகம். 6. பிலிப்பைன்ஸ் 7 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகளை கொண்ட பிலிப்பைன்சின் கடற்கரை சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் நீளமானது. 7. ஜப்பான் மலைப்பாங்கான தீவுகள் நிறைந்த ஜப்பானின் கடற்கரை 29 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகம். ஒகினாவாவின் வெப்பமண்டல கடற்கரைகள் முதல் ஹொக்கைடோவின் வடக்குப் பகுதிகள் வரை பல்வேறு வகையான கடற்கரைகளை கொண்டுள்ளது. 8. ஆஸ்திரேலியா இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களால் சூழப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் கடற்கரை சுமார் 25 ஆயிரம் கிலோமீட்டர் நீளமானது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/special-news/countries-with-the-longest-coastlines-in-the-world-do-you-know-which-country-holds-the-top-spot




