சென்னை, சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனை அருகில் உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். பெரியார் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவுப்படி இன்று (17.9.2026) வியாழக்கிழமை, தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனை அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ஆர்.குமார் ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/periyars-148th-birth-anniversary-tamil-nadu-ministers-pay-floral-tributes-to-the-film




