சென்னை, சென்னை தண்டையார்பேட்டையில் அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “அண்ணாமலையை முதிர்ந்த அரசியல்வாதி என நினைத்தேன். அவர் பாஜகவில் 8 ஆண்டுகளாக இருந்தார். மாநில தலைவர் பதவியில் இருந்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்துள்ளார். அவரிடம் இருந்து இதுபோல் அறிவிப்பு வருவது நல்லதல்ல என நினைக்கிறேன். முதலீடுகளுக்காக பெரிய போர் நடைபெற்று வருகிறது. ஒரு ரூபாய் வந்தாலும் அது தமிழ்நாட்டுக்கான முதலீடுதானே. முதலீடுகளுக்காக முதல்-அமைச்சர் வெளிநாடு செல்வதை கிண்டல், கேலி செய்வது நல்லதல்ல என நான் நினைக்கிறேன். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வரி வசூல் முறைபடுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது ஊழல் இல்லாமல் வரி வசூல் நடைபெறுகிறது. தமிழகத்தில் வெளிப்படையான, தூய்மையான ஆட்சி நடைபெறுகிறது. ஊழல் இல்லை என்பதால் பத்திரப்பதிவுக்கு அதிகம் பேர் வருகின்றனர். கடந்த ஆட்சியை ஒப்பிடுகையில் கடன் அளவை குறைத்து வருகிறோம். தமிழக அரசு பெறும் கடன் குறைந்து வருகிறது. தமிழக அரசின் வருவாயை பெருக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.” இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-ministers-london-trip-maria-wilson-hits-back-at-annamalais-criticism




