துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபையில் உள்ள துபை சர்வதேசத் திடலில் நடைபெற்றது. இந்தியா இலங்கை இடையிலான இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ஷபாலி வர்மா 39 பந்துகளில் 68 ரன்களும் (9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளில் 59 ரன்களும் (5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, ரிச்சா கோஷ் 17 ரன்கள், கமலினி 15 ரன்கள், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 14 ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் மிதாலி அயோத்யா, சமாரி அத்தப்பத்து மற்றும் சௌமுடி பிரபோதா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். பின்னர் 184 ரன் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அட்டப்பட்டு (36 ரன்), விஷ்மி குணரத்னே (20 ரன்) ஓரளவு போரா டினாலும் ரன்தேவை அதிகம் என்பதால் நெருக்கடியை சமாளிக்க முடியா மல் சரண் அடைந்தது. அந்த அணி 20 ஓவர்களில் 111 ரன்னில் அடங்கி யது. இதன் மூலம் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டித்தூக்கியது. 2024-ம் ஆண்டு இறுதி ஆட் டத்தில் இலங்கையிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி 4 விக்கெட்டும். தீப்தி ஷர்மா 3 விக்கெட் டும் சாய்த்தனர். 8-வது முறையாக. இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றுவது இது 8-வது முறையா 5. ~ 2004, 2005-06, 2006, 2008, 2012, 2016 2022-ளிலும் வென்றிருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/womens-asia-cup-india-win-by-72-runs




